பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனித உடலின் அமைப்பைப்போல் இனி யாரா லுமே படைக்க முடியாது என்று, நுண்ணிய நூதன எந்திரங்களைப் படைத்து விண்ணையும் சாடுகின்ற விஞ்ஞானிகளைப் பார்த்து சவால் விடுகிருர்கள் உடற் கூறு வல்லுகர்கள்.

உடலின் அமைப்பை விளக்கும்போது, உடல் உயிர் அணுக்களால் (செல்கள்) ஆக்கப்பட்டிருக்கின்றது என்பார்கள் உடலியல் அறிஞர்கள். உயிரணுக்கள் ஒன்று திரண்டு திசுக்களைப் படைக்கின்றன. திசுக் களின் தொகுதிகள் சேர்ந்து உறுப்புக்களை உருவாக்கு கின்றன. உறுப்புக்கள் பல சேர்ந்து ஒரு அமைப்பினை (system) உண்டாக்குகின்றன. இவ்வாறு பல அமைப் புக்களே உடலை உன்னதமான முறையிலே இயக்கிச் செல்கின்றன. இதுபோன்ற இயக்கத்திலே எத்தனை எத்தனை, விந்தை வேலைகள் விமரிசையாக நடைபெறுகின்றன. இவற்றிற்கெல்லாம் விளக்கம் தர இயலாத கிலேயிலே, இன்னும் ஆராய்ச்சியுள் தலைப்பட்டு ஆழ்ந்து கிடக் கின்றனர் விஞ்ஞானிகள். முளையும் வேலையும் எத்தனைதான் அருங் கண்டுபிடிப்புகள் உடலுள் மிகழ்ந்தாலும், மனித மூளையினைப் பற்றிய சோதனைகள் மென்மேலும் விரிந்து கொண்டேதான் போகின்றன. முடிய கையளவுதான் இதயத்தின் அளவு என்ருல், முளையில் எடை இவ்வளவுதான் இருக்கும் என்பதை யும் விஞ்ஞானிகள் கண்டு தெளிந்து கூறியிருக் கின்றனர்