பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53. தான். அதனால்தான் நமது வாழ்க்கையே சுவாசத்தில் அடங்கி இருக்கிறது என்கிறோம். உயிரணுக்கள் உற் சாகமாகப் பணிபுரிய வேண்டும் என்றால் உயிர்க்காற்று நிறையத் தேவை.

உயிர் காக்கும் காற்று

நாம் மூச்சாகக் காற்றை உள்ளிழுப்பது உயிர்க் காற்றுக்காகவே. வேண்டாம் என்று தேகம் ஒதுக்கி விடும் காற்றையே நாம் வெளிவிடுகிறோம். உள்ளி ருக்கும் காற்றுப் பையான நுரையீரலால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உயிர்க் காற்றையே இரத்தத் தந்துகி கள் காத்திருந்து தங்களது நுண்ணிய இயக்கிகளால் ஈர்த்துக்கொண்டு செல்கின்றன . இவ்வாறு உயிர்க் காற்றைப் பெற்ற இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களும் வெள்ளை அணுக்களும், மகிழ்ச்சியுற்று ஊக்கம் பெறுகின்றன. அதன் விளைவாக இரத்த ஓட்டத்தில் வேகமும் விறுவிறுப்பும், சூடும் சுமுகமான ஒட்டமும் நிறைகிறது.

இரத்த ஒட்டமானது உடல் முழுதும் ஒடி உறுப் புகளுக்குப் போய்ச் சேர்ந்து இறைத்துவிட இதயத் நிற்குக் குறைந்தது 23 வினாடிகள். அதாவது அரை நிமிட நேரமே ஆகிறது என்பது ஆராய்ச்சியாளர் முடிவு. ஆனால் உடற்பயிற்சி செய்கின்றவனுடைய உடலில் ஒடுகின்ற இரத்த ஒட்டத்தின் வேகமும், அது எடுத்துக் கொள்ளுகின்ற நேரமும் 12 வினாடிகள் என்றும், அதற்குள் அது உடல் முழுவதும் ஓடி முடிவுறுகிறது என்றும் ஆராய்ந்து கண்டு பிடித்திருக் கின்றனர்.