பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54, எனவே, உடற்பயிற்சியும், விளையாட்டும் கொண்ட ஒருவரது இதயம், இதல்ை இதமான ஒய்வினைப் பெற்று அதிக வளமையுடையதாக விளங்குவதுடன், தேவை யான இரத்தத்தைப் பாய்ச்சி அங்கங்கள் அழிவுறாமல், தேயாமல் பார்த்துக்கொள்ளவும் செய்கிறது.

விளையாடுகின்றவர்கள், ப யி ற் சி செய்பவர்கள் உடல் வலிமையுடன் விளங்கக் காரணம் இரத்த ஓட்டத் தால்தான். இரத்த ஓட்டத்தை இயக்குவது உயிர்க் காற்றுதான். அந்த உயிர்க்காற்று அதிகமாக விரும்பு வது சிவப்பு அணுக்களைத்தான். அதில் உள்ள ஹீமோகுளோபின் என்ற உயிர்ச்சத்து, அதிக இரும்புச் சத்தினைக் கேட்கிறது. அதிக இரும்புச் சத்தானது. நல்ல உணவை நன்கு கயந்து பெறுகிறது.

விளையாடுவோருக்கு வலிமை இவ்வாறு ஒன்றுக்கொன்றுதேவை என்பதால்தான் விளையாட்டு வீரன் எந்த உணவையும் விரும்புகிறான். உண்ணுகிறான். அவ்வாறு விரும்பி உண்பதால், வயிறும் விரும்பி ஏற்றுச் சீக்கிரமாக ஜீரணித்துக் கொண்டு உணவில் உள்ள எல்லாச் சக்தியையும் கிரகித்துக்கொள்கிறது. கழிவுப் பொருட்களை மட்டுமே கழித்து, மிகுந்த சக்தியை உணவில் பெறுவது விளையாட்டு வீரன் உடல் மட்டுமே செய்யக் கூடியதாகும்.

இத்தகைய உயிர்க்காற்றே, உயிரணுக்களை வாழ் வித்து வளர்த்துச் செழுமைப்படுத்துகின்றன. உயிர்க் காற்றை அதிகம் பெறும் உறுப்புக்களே உண்மையில் செழிப்பாக இயங்குகின்றன

.