பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

55 உறுப்புகளில் மிகவும் மென்மையானது மூளை என்பது நமக்கு நன்றாகத் தெரியும். அந்த மூளைக்கும் முக்கியத் தேவையாக விளங்குவது பிராணவாயு என்னும் உயிர்க் காற்றேயாகும்.

மூளையும் உயிர்க்காற்றும்

நாம் சுவாசித்துப் பெறுகின்ற மொத்த உயிர்க் காற்றில் 5-ல் 1 பாகத்தை மூளை எடுத்துக் கொள்கிறது என்று ஆராய்ச்சி அறிஞர்கள் கூறுகின்றனர். நாம் குறைவாக சுவாசித்தால் மூளைக்குப் போகின்ற உயிர்க் காற்றின் பங்கும் குறைவாகவே இருக்கும் அல்லவா!

இதனால் என்ன விளைவு ஏற்படுகிறது என்றால், முளையில் நிறைந்துள்ள உயிரணுக்கள் குறைந்து போக ஏதுவாகின்றது. செயல் பொலிவிழந்து போகின் றது. நரம்புத் தளர்ச்சி மற்றும் பலவிதக் கோளாறுகள் ஏற்படுவதுடன் அடிக்கடி களைப்பும், கடுகடுத்துக் கோபிக்கின்ற முன்கோப உணர்வும் உண்டாகி விடு கின்றன.

நரம்புத் தளர்ச்சியால் நலிபவரும், அதிர்ச்சிக்கு ஆளாகுபவரும், கோபத்தால் சண்டையிலீடுபட்டு மேல் முக்க கீழ்மூச்சு வாங்குபவரும், அடிக்கடி பேசமுடியாமல் முச்சுக்கூட விடமுடியாமல் திண்டாடிப் போவதையும் நாம் பார்க்கிறோம்.

அவர்கள் எளிதில் குணமடையக்கூடிய ஒரே வழி ஆழ்ந்து மூச்சிழுத்து நிதானமாக மூச்சை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் களைப்பு நீங்குவதுதான்.

இவ்வாறு உயிர் க் காற் று தா ன் மூளையின் வளர்ச்சிக்கும், கிளர்ச்சிக்கும் அதிகமாகப் பயன்படு