பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 கிறது. எந்தப் பாகம் உடலில் அதிகம் உழைக்கிறதோ, அங்குதான் இரத்த ஓட்டம் அதிகமாகச் செல்கிறது. என்பது உலகம் அறிந்த உண்மை. எந்தப் பாகம் அதிகம் உழைக்கிறதோ அதுதான் அற்புத வளர்ச்சி பெறும், மலர்ச்சி பெறும் என்பதும் ஆராய்ச்சி கண்ட உண்மை

ஒட்டகச் சிவிங்கியின் கழுத்து வளர்ச்சிக்கு அது காட்டில் நிற்கும் உயர்ந்த மரங்களில்உள்ள தழைகளைத் தின்ன முயன்றதன் விளைவே என்பது பரிணம ஆராய்ச்சியாளர்கள் வாதமாகும்.

அதுபோலவே, அதிக உயிர்க் காற்று பெறும் மூளை அதிக வளமுடையதாக மாறி, உழைப்பில் களைப் பில்லாது பணியாற்றத் தொடங்குகிறது. அதிகமாக மூச்சிழுக்கவும், மூச்சு விடவும் கூடிய வாய்ப்பை பரந்த வெளியில் திறந்த உடலுடன், மகிழ்ந்த நிலையில் இயங்கும் வாய்ப்பை, விளையாட்டும் உடற்பயிற்சியுமே ஒருவருக்கு அளிக்கிறது. அதனால்தான் அத்தகைய அற்புத வாய்ப்பினை அளிக்க முடியும்.

நிறைந்த உயிர்க்காற்றில் நீடித்த உரம் பெறும் மூளை நிறைந்த உழைப்புகளுக்குத் தயாராகவே இருக்கிறது. எத்தகைய நிலையிலும் இனிதாக இயங்கு தற்கேற்ற இதமான சூழ்நிலைக்கும் அது காத்துக் கொண்டிருக்கிறது.

விளையாட்டுக்களில் விளைகின்ற சந்தர்ப்பம் சூழ் நிலைக்கு ஏற்ப மூளை ஒத்துழைக்கிறது. மும்முரமாக அவற்றை சரிசெய்ய ஈடு கொடுக்கிறது. ஒவ்வொரு வினாடியும் நேர்கின்ற திகிலுக்கும் திகைப்பிற்கும் முன்னேற்றத்திற்கும். முடிவிற்கும், சிந்தனைக்கும்