பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57 செயலூக்கத்திற்கும் மூளையின் இயக்கமே தோன்ருத் துணையாக அமைந்து விடுகின்றது.

இவ்வாறு அனுபவங்களை ஏற்று ஏற்று, அதில் இருந்து விடுபடவும், வடுகெடவும், நிலைபெறவும், வழி யுறவும் மூளை உழைப்பதால் மேலும் வளமாகிறது என்பது மட்டுமல்ல. அனுபவத்தால் செயல்முறையில் விருத்தியும் அடைகிறது என்பதே அனுபவம் காட்டு கின்ற உண்மைகளாகும். உலகப் புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களின் ஒப்பற்ற சரித்திரங்கள் இதனையே வலியுறுத்தி விளக்கிச் சொல்வதை நாம் என்றும் காணலாம்.

எனவே, திறந்த வெளிக் காற்றினுாடே சேர்ந்து விளையாடி, சிறந்தோங்கும் உயிர்க்காற்றை மிகுதியாகப் பெற்று, செழுமையுடன் உடலையும் மூளையையும் வளமாக்கிக்கொண்டு செம்மாந்து வாழ்வோம் . இயற்கையின் சீதனமாம் உயிர்க்காற்றினை இதயம் மகிழ ஏற்போம். இதயத்தைக் காப்போம். பதமான வாழ்வினை வளர்ப்போம். பயன் பெறுவோம். வெளியில் மட்டுமா! வீட்டுக்குள்ளேயும் நாம் விளையாடலாமே!