பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 குழந்தைகள் வளர வேண்டும் என்று விரும்புகின்ற பெற்றேர்கள் அனைவரும், தாங்கள் அதுபோலவே வாழ்க்கை முறை யை அமைத்துக் கொள்ளவும் வேண்டும் என்பதை உணர வேண்டும்.

தந்தை, தானறிந்த அனுபவங்களைத் தொகுத்து அவைகளிடையே பெற்ற அறிவினைத் தனது குழந்தை களுக்குச் சொல்வது எல்லாக் குடும்பங்களிலும் கடை பெறுகின்ற செயல்முறைதான். சொல்ல விரும்புகின்ற கருத்துக்கள் ஒன்ருக இருந்தாலும், சொல்ல மேற் கொள்கின்ற முறைகள் தான் மாறுபட்டிருக்கும்.

அறிவுரைகளைச் சிலர் கதையாகச் சொல்வார்கள். சிலர் கணக்கைக் காட்டிக் கூறுவார்கள். சிலர் பிறரை உதாரணம் காட்டிப் பேசுவார்கள் என்ரு றாலும் அனுபவ பூர்வமான கருத்துக்களே குழந்தைகளால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

பழகும் குழந்தைகள் விதி என்றால் என்ன? ஒழுங்குமுறை, ஒழுக்கநெறி என்ருல் எப்படி? தவறு என்பது எப்படி நேருகிறது? தவற்றினைத் தவிர்த்திடும் முறைகள் எவை? தவறு புரியாமலேயே ஒரு காரியத்தினைச் செய்து விடுவது எப்படி? தவற்றுக்குரிய தண்டனைகள் எப்படி இருக்கும்? தவறு என்ருல் சங்கடப்படாமல் ஒத்துக்கொள்வது எப்படி? உரிமை என்பது என்ன? தனக்குரிய உரிமைகளை அடுத்தவருக்குரிய உரிமைகள் கெடாமல் அனுபவிப்பது எப்படி? இடையூறு ஏற்பட்டால் எப்படிச் சமாளிப்பது? என்பன போன்ற கருத்துக்களைக் குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டியது பெற்றேர்களின் கடமையாகும்.