பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62 பிரச்சினைகள்நிறைந்ததுதான் வாழ்க்கை என்றால் பிரச்சினைகளைத்தீர்த்துவிட்டுத்தான் மற்ற வேலை என்று ஒருவர் முயற்சித்தாரானல், அவருக்கு இந்தப் பிறவி ஒன்று போதாது. அலை ஒய்ந்தால்தான் தலை முழுகு வேன் என்று கடற்கரையில் காத்து கின்ற ஒருவரின் கதையாகவே இருக்கும். அதிலும் வீட்டிற்குள் நுழைந்து, குடும்பத் தினருடன் கலந்து இருக்கும்போது பிரச்சினைகளையே பெரிதுபடுத்திக் கொண்டிருந்தால் என்ன ஆகும்? அது வளரும் குழந்தைகளைப் பாதித்து விடாதா! குடும்பத்தினர் அனைவரும் வெறும் உருவத்தால் மட்டும் நெருங்கி இருக்கவில்லை உள்ளத்தாலும் ஒருங்கிணைந்து இருப்பதால்தான் அதனை உறவு என்கிம். அந்த உறவு திருவாக, திறமாக, தரமாக வடிவெடுத்து வளம் பரப்ப வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமுமாகும். ‘ஒரு காட்-ை விட குடும்பம் துய்மையானது, புனிதமானது என்கிருர் பயஸ் என்னும் பேரறிஞர். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் உடனிருந்து ஒன்ருக நெருங்கி வாழ்வதால், கலந்துரையாட, கலந் துறவாட முடியும். அங்கே சில பிரச்சினைகளைப் பெருக் கிக்காட்டி விடுகின்றபொழுது, மோதல்கள் உண்டாகும். மன வேறுபாடுகள் பெருக, விருப்பு, வெறுப்புகள் நிறைய, வேதனை விளைக்கும் நிகழ்ச்சிகளும் வளர்ந்து கொண்டே போகும். எனவே குடும்பத்தில் மகிழ்ச்சி யான சொல்லோட்டம், வேடிக்கை நிறைந்த பேச்சுக் கள், இன்பமான புன்னகை என்றும் விளங்கவேண்டும், துலங்க வேண்டும், முழங்க வேண்டும் என்ருல், அனை வரையும் ஈடுபடுத்தி அங்கே நிலவும் சுற்றுப்புற சூழ்