பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65 பொறுப்பானது எல்லாக் குடும்பத் தலைவர்களுக்கும் உண்டு என்பதால், அதனை நிறைவேற்றி வைப்பதற் கேற்ற எளிய வழி விளையாட்டுக்கள்தான் என்று எல்லாநாட்டினருமே ஏற்றுக் கொண்டிருப்பதால், வீட்டுக் குள்ளே விளையாடி, நாட்டுக்கு நல்ல குடிமக்களை உரு வாக்கும் நல்ல பணியைத் தொடர்வதுதானே கல்ல பெற்ருேர்களின் கடமை! விளையாடி மகிழ்வோம்! வாழ்வு என்பது மகிழ் வதற்காகத்தானே! தாயும் தந்தையும் தாங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும்பொழுது பெறுகிற பயன்களைப் புரிந்து கொண்டோம். பெண்கள் தாங்களும் விளையாட் டில் பங்கு பெறவேண்டும் என்று முற்காலத்தில் பெரும் போராட்டமே நடத்தவேண்டியிருந்தது. சில சமயங் களில் தங்கள் உயிரையே தியாகம் செய்யவும் வேண்டியிருந்தது. இன்று இயல்பாக விளையாட்டுக்களில் பங்குபெற முன்வந்திருக்கும் பெண்குலம், பங்கு பெருத விளையாட் டுக்களே இல்லை என்ற அளவுக்கு முன்னேற்றம் வளர்ந்திருக்கிறது. அத்தகைய சீரிய பணியை, சிறப்பான வரலாற் றைத் தொடங்கி வைத்தாள் ஒரு கிரேக்கப் பெண். அவ் வரலாற்றினை இனி காண்போம். வி. که )U5-ز