பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 8. விளையாட்டும் பெண்களும் தலைமை தாங்கிய தாய்க்குலம்! ஆதிகால வரலாற்றை ஆராய்ந்துகூறும் அறிஞர் கள், அக்கால குடும்பத்திற்குப் பாதுகாவலராகவும் கூட்டத்திற்குத் தலைமை யேற்றுப் புரவலராகவும் இருந்து காத்து வந்தனர் என்று, பெண்களைப் பற்றிப் பெரிதும் புகழ்வார்கள். வேட்டைக்குப் போகும்போது தலைவியாகவும், வீட் டுக்கு வந்ததும் துணைவியாகவும் வாழ்ந்த பெண் னினம், கொஞ்சங் கொஞ்சமாக மாறி, ஆனுக்குத் தலைமைப் பீடம் தந்துவிட்டு ஒதுங்கிக் கொண்டது என்றும் உரைப்பர். ஒதுக்கப்பட்டது என்று உரைட் பாரும் உண்டு. நாகரீகம் மனித இனத்துடன் கிழலாகத் தொடரத் தொடர, பெண் இனம் நான்கு சுவர்களுக்குள்ளே ஒ துங்கிக் கொண்டது, அவ்வப்போது, ஒரிரு பெண் மணிகள், தெறித்து வெளியே வந்து, மூடிய பழங் கோட்டைக் கதவுகளைக் திறந்து, வீராங்கனைகளாக