பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 காணவே முடியாது. மீறி யாரேனும் பந்தயம் பார்க்க: வந்தால், அவர்களுக்கு உடனடியாகக் கிடைப்பது மரண தண்டனையே. ஆமாம், மலையுச்சிக்கு அந்தப் பெண்ணைக் கொண்டு சென்று, அங்கிருந்து தூக்கிக் கீழே எறிந்துவிடுவார்கள். . பயங்கரமான தண்டனைதான் இது. ஆலுைம் விளையாட்டுக்களில் ஆர்வமுள்ள பெண்கள், இதற்கெல் லாம் அஞ்சிவிடுவார்களா என்ன? உயர்ந்த மரத்தின் உச்சிக்கு ஏறி, அங்கிருந்து ஒளிந்துகொண்டு பந்தயங் களைப் பார்ப்பார்கள். சுற்றிலும் மறைக்கப்பட்ட சுவர் களில் உள்ள பொந்துகள் வழியாகக் கண்டு களிப் பார்கள். கண்டு பிடிக்கப்பட்டால், கால தேவனுக்குப் பலி. அவ்வளவுதான்.

இத்தனையும் தெரிந்தும் ஒரு பெண், பெயர் பிரனீள் என்பவள், ஆணுக வேஷமிட்டுப் பந்தயம் பார்க்கச் சென்ருள். தன் அருமை மகன் பிசிடோரஸ் என்பவனின் ஆற்றல் மிக்கக் குத்துச் சண்டையைக் கண்டாள். அவன் வெற்றி பெற்றதும் தன்னை மறந்தாள், அவனருகே ஒடினள். ஆரத் தழுவி முத்தமிட்டாள். அவளது ஆவேசத்தால், ஆணுடை குலைந்தது. வேஷம் கலைந்தது. பெண் எனும் உண்மை புரிந்தது.

வெகுண்டனர் அதிகாரிகள். விரைந்து பற்றினர். அவளைக் குற்றவாளிக் கூண்டிலே ஏற்றினர், அவளது. வாக்கு மூலம் வெடித்தது.' என் கணவனும், என் தந்தையும் முன்னுள் ஒலிம்பிக் வீரர்களே. அவர்கள் இறந்த பிறகு என் மகன் நானே ஒலிம்பிக் வீரனுக்கப் பயிற்சி தந்தேன். என் மகன் எப்படி போரிடுகிறான் என்றறிய எனக்கு ஆசை இருக்காதா? அதனுதான் சட்டத்தை மீறினேன். என் இஷ்டத்தைப் பூர்த்தி