பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. அறிவூட்டும் ஆடுகளம்


ஆடுகளம் அழைக்கிறது எல்லையற்று விரிந்து கிடக்கும் நிலப்பரப்பை பரந்தவெளி என்கிருேம். வேலியில்லாமலும் கண்னுக் கெட்டுகின்ற துாரம் வரை காணக் கிடக்கின்ற சமகிலத்தை மைதானம் என்கிருேம். இன்னும் கொஞ்சம் பரப்பளவு குறைந்த இடத்தைத் திடல் என்கிறோம்.

அதுபோலவே, ஒரு எல்லையுள்ள வரையறை கொண்ட அளவுடன் ஒரு கோக்கத்திற்காகப் பயன்படும் சமகிலைப் பகுதியைக் களம் என்கிறோம். குறிப்பிட்ட பகுதியிலே யுத்தம் கடந்த பரப்பினைப் போர்க்களம் என் கிருேம். வயலில் விளைந்த கெற்கதிர்களை அடித்து கெல்மணிகளைக் குவித்தெடுக்கும் இடப் பரப்பினை கெற்களம் என்கிருேம். அஃதொப்பவே, விளையாடுகின்ற நிலப்பரப்பினையும் ஆடுகளம் என்று அழைத்து மகிழ்கிறோம்.

போர்க்களமானது புறம் வந்த பகையைப் போக்கவும், போராடவும் கூடிய பெரும்பணியைத்