பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79 உற்சாகமாக ஆடத் தொடங்கியவனின் மூளை நன்ருக விழித்துக் கொள்கிறது. சோம்பலைத் துடைத்துக் கொள்கிறது. அறியாமையை மாற்றிக் கொள்கிறது. அதனை விரட்டி, அந்த இடத்திலேயே அனுபவத்தில் வருகின்ற அறிவினை அலங்காரமாகச் சூட்டிக் கொள்கிறது.

மூளையின் விழிப்புணர்ச்சியால் உடலில் ஒரு புத்துணர்ச்சி. செயலில் ஒரு புது எழுச்சி. சிந்தனையில் ஒரு மறுமலர்ச்சி. உறுப்புக்களிலும் ஒருவித உற்சாக வளர்ச்சி மேலோங்கி கின்று, மேன்மைக்கு வழி காட்டு கிறது.  அகமும் புறமும்

இவ்வாறு அகத்தில் மூளையும், புறத்தில் உறுப்புக் களும் பூரிப்புடன் பங்கு பெறும் பொழுது, ஆடுகளத் தின் விதிகள் அவர்களைக் காட்டாற்று வெள்ளம் கரைக்கு அடங்கிச் செல்வது போல செல்ல வைத்து விடுகின்றன.

ஒரு பொருளை விரும்பும்போது தான் மதிக்கவும் துதிக்கவும் தோன்றும், அப்பொழுதுதான் கட்டுப் படவும், திட்டமிடவும் துரண்டும். விளையாட்டை விரும்பும் பொழுதே, சட்டத்திற்குக் கட்டுப்படத் தெரி கிறது. சகலரையும் மதிக்கத் தெரிகிறது. கூட விளை யாடுபவரின் திறமையை அனுபவித்துப் பாராட்டும் பெருமை புரிகிறது. தன் திறமையைத் தானே வெளிப் படுத்திக்கொணரும் தன்மையும் மிகுதியாக வேண்டும் என்று பகுத்துணரவும் முடிகிறது.

பிறர் பாராட்டைப் பெற வேண்டுமானல் ஒழுக்கம் தேவை உயர்ந்த செயல் தேவை என்பது போல, விளையாட்டில்