பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. விளையாட்டும் உடலமைப்பும்


ஒப்பில்லா உடற்கோயில்

'அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்று மனிதப் பிறவியின் பெருமை தெரிந்து பாடினர் ஒளவைப் பாட்டியார்.

'எலும்பால் கூடாக்கி, இணையிலா நரம்பினுல் வரிந்து கட்டி, அதனுாடே சிவப்பு இரத்தம் கலந்த தசை களினல் இணைத்து, திருந்திய உடலாக மாற்றி, இன்ப மிகு உயிர் நிலையை ஏற்றினுன் இறைவன்’ என்று பாடிய திருமூலர், இந்த உடலைப் போன்ற அற்புத யந்திரம் இல்லை என்று கருத்து மிளிர' இறைவன்செய்த இரும்பொறை யாக்கை' என்று அற்புதமாகக் கூறிச் சென்ருர்.

சிற்றெறும்பு முதலாக சீவராசிகள் அனைத்திலும் சிறப்புற அமைந்தது கம் உடல். பிற உயிர்கள். அனைத்தும் பெறக்கூடாத பெரும் பேருக அல்லவா மனித உடல் மலர்ந்திருக்கிறது!

வி.விரு-6