பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 நிமிர்ந்து நிற்கின்ற இந்த உடலில் நினைத்து மகிழும் நெஞ்சம், இரத்தம் இறைக்கும் இதயம், காற்றை கிரப்பித் தள்ளும் நுரையீரல் போன்ற எத்தனையோ அற்புதங்கள் அமைந்திருந்தாலும், மிருகங்களைப் போல உடலில் முடித்திரள் இல்லை. விரலில் வளைந்த நகங்கள் இல்லை. வாயினுள் கூர் நிறைந்த கோரப் பற்கள் பேசத் தெரிந்த, யோசிக்கமுடிந்த, ஆற்றலைப் பயன் படுத்தும் அறிவு நிறைந்த மனித உடலின் மனித மூளை யின் மகிமையே மகிமை நாம் பெற்ற பேறு, செய்த புண்ணியம் இந்த பிறவியில் மனித உடல் தாங்கி வந்திருக்கிருேம் என்று அக்கால மகான்களில் இருந்து இக்கால மனிதர்கள் வரை இனிமை ததும்பப் பாடிச் சென்ற டாட்டுகளும் ஏராளம். காலத்திற்கேற்றவாறு கோ ல ம் மட்டுமல்ல. கொள்கையும் மாறும் என்று எல்லாத் துறையினரும் பேசிக் கொள்வார்கள். ஆனால் உடலமைப்பும் இதற்கு விதிவிலக்கல்ல என்று சரித்திரச் சான்றுகள் பறை சாற்றுகின்றன. உடலமைப்பு என்றவுடன், உற்சாகத்துடன் உரிய கடமை உணர்வுடன் உடலை வளர்த்துக் காத்து போற்றிப் புகழ்ந்து பெருமையுடன் பேணிய கிரேக்க இனம்தான் நம் கண் முன்னே முதலில் காட்சியளிக்கும். பிறந்த குழந்தையை சாராயத்தில் அமுக்கி எடுத்து சோதித்ததும், அக்குழந்தை குறையுள்ளதாக இருந்தால் கொண்டு போய் காட்டிலே எறிந்து அழித்த முறையும், ஆண் குழந்தைகளை ஏழு வயது முதல் முப்பது வயது வரை உடற் பயிற்சியிலும், போர்ப் பயிற்சியிலும் ஈடு