பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
85

என்று டாக்டர் 'டட்லி' என்பவர் முயன்றார். அவர் இடைவிடாது நாற்பது ஆண்டுகள் உடலாளர்கள் ஓட்டப் பந்தய வீரர்களின் உடலமைப்பைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். இறுதியாக 74 ஓட்டக்காரர்களைத் தேர்ந்தெடுத்து ஆராய்ந்து, கடைசியாக ஓரமைப்பை, உடல் அளவினை டாக்டர் மெகன்சி என்பவருக்குத் தந்தார். அவரோ அவனி வியக்கும் வண்ணம் அழகுறு சிலை ஒன்றை அமைத்துத் தந்தார். எல்லோரும் ஏகோபித்த முறையிலே ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

உலகிலே உள்ள விரைவான ஓட்டக்காரர்கள் அனைவரையும் ஆராய்ந்து, அவர்கள் அனைவரும் 5 அடி 3 அங்குலத்தில் இருந்து ஆறடி மூன்றங்குலம் என்ற உயர அளவில் இருப்பதை அறிந்து, அதற்கு ஏற்றவாறு சராசரி உடலமைப்பை சரி செய்த போது அந்த முடிவானது இப்படித்தான் எழுந்தது.

உடலமைப்பானது விரிந்த மார்பும், வலிய கைகளும் இருப்பதுடன் எலும்பின் அமைப்பில் எடை அதிகமில்லாமல், தசையமைப்பில் சற்று அதிக எடையுடன் இருந்தால், பார்ப்பதற்குக் கவர்ச்சியாக இருக்கும்.

இக்கால உடலமைப்பு

காலம் இன்னும் மாறிக் கொண்டே வந்தது. இக்காலத்து இளைஞர்களின் உடலைப் பாருங்கள்! நான் உள்ளேயே இருக்கத்தான் வேண்டுமா? என்று நாணத்துடன் கேட்கும் நெஞ்சமைப்பு, 'வேண்டாத வேளையில் எல்லாம் கொண்டு வந்து தள்ளுகின்றீர்களே' என்று வேண்டாத உணவுச்சுமையை வெறுப்புடன் தாங்கி விரிந்து சரிந்து கிடக்கின்ற வயிற்றமைப்பு: 'இன்னும்