பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
87

 உணர்ச்சிகள், அச்சம் நிறைந்த கோழைத்தனம், எப் பொழுதும் சோகமாய் இருத்தல் என்பனவாகும்.

குணதிசயங்கள்தான் உடலமைப்பை உருவாக்கு கின்றன என்பதையும், மற்றவர்கள் ஆராயத் தொடங் கினர். அந்த ஆராய்ச்சியில் அதிகம் ஈடுபட்டவர் அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் வில்லியம் ஷெல்டன் என்பவர்.

பல்கலைக் கழகத்தில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் உடல் அமைப்பையும், அவர்கள் பெற்றிருக்கின்ற உணர்ச்சிமயமான குனதிசயங் களையும் ஆராய்ந்து, புகைப்படம் எடுத்து, பெருமளவில் பரிசோதனை செய்து உலகத்தில் உள்ள மனிதர்களின் உடலமைப்பை மூன்று வகையாகப் பிரித்து வெளி யிட்டார்.

அரக்க உடல் அமைப்பு (Endomorph) :

கைகளும், கால்களும், நெஞ்சும், மற்றும் எல்லா எலும்புகளும் அவயவங்களும் நீண்டதாகவும், திரண் டதாகவும், நீண்ட எலும்புகளுடனே கொழுப்பும் தசை களும் கிறைந்ததாகவும் அமைந்த உடலமைப்பு முத லாவதாகும் . இவர்களது சிறுகுடல் 23லிருந்து 25 அடி நீளமும், பெருங்குடல் 5 லிருந்து 8 அடி நீளமுள்ளதாகவும் இருக்கும் என்று கணக்கிட்டிருக்கின்றனர்.

ஆகவே அதிக உயரம், அகன்ற மார்பு, செம்மாந்த தோற்றம் என்ற உடலமைப்பு என்று கொள்ளலாம்.