பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

கிறார்கள். ஒழுங்கிலே தவறுபவர்கள் உடனடியாக தண்டிக்கப்படுகிறார்கள். மேலும், ஒட்டப் பந்தயத்தி லிருந்து தவிர்க்கப்படுகிறார்கள். வெற்றி வாய்ப்பினைப் பெற்று முதலில் ஓடிவந்து வெற்றி பெற்று இருந்தாலும் அவர்கள் விலக்கப்படுகின்றார்கள்.

வாழ்க்கை முறைக்கு இந்த விதி முறை எவ்வளவு அருமையாகப் பயன்படுகிறது! ஒருவருக்கு உரிமை இருக்கிறது என்பதை விளக்க வந்த மேல்நாட்டு அறிஞர் ஒருவர், "அடுத்தவர் மூக்கினைத் தொடுகின்றவரை கைகளை நீட்ட உனக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அடுத்தவர் மூக்கினைத் தொட்டு விட்டால் அவர் உரிமையை அதிகமாக எடுத்துக் கொண்டீர்; பிறரது உரிமை பாதிக்கும்படி நடந்து கொண்டீர். மற்ருெருவர் உரிமைக்கு பங்கம் விளைவித்தவராகின்றீர். அதுவே தான் ஒட்டப் பந்தயத்தின் தத்துவமும் என்றும் கூறுகிறோம்.

பந்தயம் வழங்கிய வாழ்க்கைப் பரிசு தான் தன்னுடைய வழியிலே, பிறருக்கு இடையூறு விளைவிக்காமல் எத்தனை வேகத்துடனும் ஒடலாம். இயலாத பொழுது மெதுவாகவேனும் போகலாம். அல்லது நடக்கலாம். ஆனால் அடுத்தவர் முயற்சிக்கு அணுவளவேனும் குந்தகம் நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் ஒட்டப் பந்தயத்தின் நோக்கம்.

வாழ விடு அல்லது வழியை விடு என்பதாக, வாழ்க்கை முறையை, நெறியைக் கூறுவார்கள் பெரியோர்கள். அவ்வாறு, தான் வாழவும், பிறரை வாழ விடவும், தன்னால் முடியாதபொழுது வழியை விடவும்