பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12. விரைவாக ஓடுவது எப்படி?

ஓடி ஒளிந்த ஹிட்லர் அகிலத்தையே ஆட்டிப் படைத்து அரசாள நினைத்த அரக்க மனம் கொண்ட ஹிட்லர், கொலு வீற்றிருந்து கோலோச்சிய நாட்களிலே ஒரு நாள்1936ஆம் ஆண்டு ஜெர்மனியின் புகழ்பெற்ற நகரமாகிய பெர்லினில் ஒலிம்பிக் பந்தயங்கள் தொடங்கவிருந்தன.

'எல்லா இனங்களிலும் எங்கள் ஆரிய இனமே உயர்ந்தது. மற்ற இனங்கள் மட்டரகமானவை', என்று மண்டைக் கனத்துடன் பேசி, மூர்க்கத்தனமான குதர்க்க வாதம் புரிந்த ஹிட்லரின் ஓலம், அவன் நாடெங்கும் ஒலியெழுப்பிக் கொண்டிருந்த காலம் அது.

"அமெரிக்கா மற்றும் அன்னிய நாடுகளிலிருந்து வரும் நீக்ரோ ஒட்டக்காரர்களை, எங்கள் ஆரிய வீரர்கள் வெற்றி கொள்வார்கள். வீரப் பதக்கங்களைப் பெறுவார்கள். நீக்ரோக்களின் திறமைகளனைத்தையும் நிர்மூல மாக்கி விடுவார்கள், என்று கற்பனைகளைக் கொட்டிக் கதை விட்டுக்கொண்டிருந்தனர் ஹிட்லரின் தாசானு, தாசர்கள்.