பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். நவராஜ் செல்லையா

[] 101


அமைப்புக் கிடைக்கும் என்பதற்காக, ஓடிவரும் பாதையில் ஒரு சிலர் அடையாளம் இடுவார்கள்.

ஆனால் ஓடிவருகின்ற நடுப்பாதையில் அவர்கள் அடையாளமோ, குறியோ வைத்துக் கொள்ளக்கூடாது. நடுவர் அனுமதியுடன் அவர்கள் (விழாக் குழுவினர்) தருகின்ற ஏதாவது அடையாளப் பொருளை ஓடி வரும் பாதையின் பக்கவாட்டில் பிறருக்கு இடையூறு தருவதாக இல்லாமல் வைத்துக் கொள்ள அனுமதிக்கலாம்.

குறுக்குக் குச்சியினை ஏற்றுவதின் மூலம் ஏற்படுகின்ற உயரத்தை நடுவர்களே தீர்மானிக்க வேண்டும். உடலாளர்களை அபிப்பிராயம் கேட்கப் போனால், பலரது கருத்தக்கள் அங்கே குவிந்து, குழப்பமே மேலோங்கி நிற்க வழியுண்டாகிவிடும். ஆகவே, தனியராக நின்று தீர்மானிப்பது நடுவர் கடமை.

ஒவ்வொரு முறையும் எத்தனை அங்குலங்கள் உயர்த்த வேண்டும் என்பதையும் நடுவரே தீர்மானிக்க வேண்டும்.

ஒவ்வொரு உயரத்யுைம் தாண்ட ஒவ்வொருவருக்கும் மூன்று முறை வாய்ப்புண்டு. தவறியவர் வாய்ப்பை இழந்து விடுகிறார்.

ஒவ்வொருவரும் தான் விரும்பும் உயரத்தில், இருந்து தாண்டவே அனுமதியுண்டு. அதை நடுவர் கட்டாயப்படுத்தக்கூடாது.