பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

105


கொண்டால் பயன்படுத்தலாம். ஆனால், அடுத்தவர்கள் 'கோலை'த் தந்துதான் ஆகவேண்டும் என்று யாரையும் யாரும் கட்டுப்படுத்தவோ, கட்டாயப் படுத்தவோ கூடாது, முடியாது.

தாண்ட உதவும் சாதனங்களான இரு பக்கத்தில் நிற்கும் இரு கம்பங்களையும் எக்காரணத்தை முன்னிட்டும் இடமாற்றம் செய்யவே கூடாது.

உதைத்தெழும்புகின்ற தரைப்பகுதி, தாண்டுவோருக்கு சாதகமாகவும் சரியாகவும் இல்லை என்று நடுவர் உணர்ந்தால் ஒழிய, கம்பங்களை மாற்றுதல் கூடாது.

மாற்றித்தான் ஆகவேண்டும் என்று நடுவர் முடிவு செய்ய நேர்ந்தால், போட்டியில் பங்கு பெறுகின்ற அத்தனைபேரும், தாண்டுகின்ற ஒர் வாய்ப்பைப் பெற்ற பிறகே மாற்ற வேண்டும்.

உயரத் தாண்டலிலும், கோலுான்றித் தாண்டலிலும் முதலாம் இடத்திற்கு (சமநிலை) இருவர் வந்துவிட்டால் எப்படி சமாளிப்பது என்பதற்கு சில விதி முறைகள் உள்ளன. இம் முறைகளையே பின்பற்றி சமநிலையைத் தகர்த்துச் சரி 105

செய்ய வேண்டும்.

105 1. எந்த உயரத்தில் உடலாளர்களுக்கு இடையில் தாண்ட முடியாமல் (இருவருக்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு) சமநிலை ஏற்பட்டதோ, அந்த உயரத்தைத் தாண்டுவதற்கு அவர் எடுத்துக் கொண்ட குறைந்தளவு தாண்டும் வாய்ப்புக்களை (Lowest number of jumps) முதலில் கணக்கிட்டு,யார்