பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
108 [] விளையாட்டு விழா நடத்துவது எப்படி?


அவ்வாறு தரப்பட்ட 6 முயற்சிகளில் எவர் அதிக தூரம் தாண்டியிருக்கிறாரோ, அவரே இறுதியில் வெற்றி பெற்றவராவார்.

ஓடிவந்து தாண்டக்கூடிய உடலாளர், இவ்வளவு தூரத்தில் இருந்துதான் ஓடிவந்து தாண்ட வேண்டும் என்ற நிலை இல்லை.

உதைத்தெழும்பும் பலகையின் முன்புறம் (அதாவது மணற் பகுதிக்கு அருகில் உள்ள பலகையின் பக்கமே முன்புறமாகும்) ஈர மணலால் கரை கட்டியிருக்கும். தாண்ட வருகின்ற உடலாளர், பலகையின் மீது கால் வைத்து உதைத்துத் தாண்டலாம், பலகை வரை ஒடி வந்து நிற்பது தவறல்ல.

ஆனால், மணலை மிதிப்பதோ, அல்லது அதற்கு நேர்க்கோட்டுப் பகுதியாக உள்ள எல்லையை பக்கவாட்டில் மிதிப்பதோ அல்லது கடப்பதோ தவறாகும். மணலை மிதித்துக்கொண்டு தாண்டியவரின் தாண்டிய தூரத்தை அளக்கக் கூடாது.

ஒடி வந்து மணலை மிதித்து விட்டு நின்றாலும் சரி, தாண்டினாலும் சரி, அவர் தாண்டக்கூடிய தனது ஒர் வாய்ப்பை, இழந்துவிட்டார் என்றே குறித்துக்கொள்ள வேண்டும்.

தாண்டிக் குதித்தவரது உடலின் எந்த பாகம் (ஈர மணலுக்கு அருகாமையில் உள்ளது போல) மிகக் குறைந்த துரத்தில் தொட்டதோ அந்த இடத்தைத் தான் அமைக்க வேண்டும். (உ-ம்) ஒருவர் அதிக தூரம் தாண்டிக் குதித்து, (நிதானமிழந்து)