பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எஸ். நவராஜ் செல்லையா
[] 109


சமநிலையிழந்து முன்புறம் விழாமல் பின்புறம் கையை ஊன்றிவிட்டால், அவர் கையை ஊன்றிய இடத்திலிருந்து தான் அளக்க வேண்டும். அளக்கும்போது, நேர்க்கோட்டளவு இருப்பது போலவே, பலகைக்கும் தாண்டிய இடத்திற்கும் உள்ள தூரத்தை அளக்க வேண்டும்.

பலகை முடிந்து மணலின் கரை தொடங்கும் இடத்தில்தான் அளக்க வேண்டும். குதித்த இடத்தில் கால்பட்டகரை இருக்குமிடந்தான் அளக்க வேண்டிய இடம், இந்த இடைப்பட்ட தூரம் தான் அளக்கப்படுமிடம் பலகைப் பக்கமிருந்து தாண்டாமல், இன்னும் அகலமாயுள்ள தரைப்பக்கமிருந்து தாண்டிக் குதித்தால் பலகைக்கு இணையாக நேர்க்கோடு ஒன்றை இழுத்து அங்கிருந்துதான் அளக்க வேண்டும்.

தாண்டிக் குதிக்கின்ற மணற் பரப்பின் அகலம் 9 அடியும், பலகையிலிருந்து அதன் நீளப்பகுதி 32 அடி 10 அங்குலமும் இருக்க வேண்டும்.

4. மும்முறைத் தாண்டல்

மும்முறைத் தாண்டல் என்பது, வேகமாக ஒடி வந்து உதைத்தெழும்பிய காலாலே எம்பிக் குதித்து நின்று, பிறகு அதே காலால் தாவி மறு காலால் நின்று பிறகு அந்தக் காலால் தாண்டிக் குதித்து இருகாலையும் மணற் பரப்பில் ஊன்றுவதாகும்.

அதாவது, இடது காலால் உதைத்தெழும்பி இடது காலில் நின்று, பிறகு இடக்காலால் தாவிக்