பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



எஸ். நவராஜ் செல்லையா

9


இத்தகைய சிறப்பு மிக்க நிகழ்ச்சிகளை நடத்து வதைத்தான் விளையாட்டு விழா நடத்துவது எப்படி என்ற தலைப்புடன் விவரித்திருக்கிறோம்.

விளையாட்டு விழா என்பது வெறும் வேடிக்கைக் காட்டும் பொழுதுபோக்கல்ல; பலர் கூடி வாயளக்கும் வம்பு மடமுமல்ல; விரைக உயர்க, வலிமை பெறுக (Faster, Higher, Stronger) என்ற குறிக்கோளை நிறைவேற்ற வந்த நிறைகுணங்கொண்ட நற்றுணை இது.

மனிதனுக்கு அமைந்த குணங்களில் ஒடுதல், நடத்தல், தாண்டுதல், எறிதல் போன்றவை தலையாய குணங்களாகும். இந்தக் குணங்களை வளர்க்க உதவுவது, செழிக்க உதவுவது, சிறப்புப் பணி செய்ய உதவுவது இவ்விளையாட்டு விழாக்களே.

இது போன்ற விளையாட்டு விழாக்களை நடத்துவது எல்லோரும் நினைப்பதுபோல, மிகவும் எளிதான காரியமல்ல. போகிற போக்கிலே நடத்தி விடலாம் என்ற வாய்ப் பேச்சுக்கு இதிலே வழியேயில்லை. வெறும் வீராப்புப் பேசி வருவோர், இறுதியிலே முகத்திலே கரியைப் பூசிக்கொண்டுதான் போவார். ஏனென்றால் இவ்விழா நடத்த எடுத்துக் கொள்ளும் முயற்சிகளுக்கு இதோ இந்த சான்றைப் படியுங்கள்.

ஒரு செயல் கடினமானது என்று குறிக்க, 'வீட்டைக் கட்டிப் பாருங்கள், கல்யாணம் செய்து பாருங்கள்’ என்று கூறுவார்கள். இந்த காரியங்கள்