பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
110 [] விளையாட்டு விழா நடத்துவது எப்படி?


குதித்து வலது காலில் நின்று, பிறகு வலது காலால் உதைத்தெழும்பி இரண்டு காலாலும் மணற் பறப்பில் குதித்து நிற்பதாகும்.

இந்தப் போட்டியில் அதிக தூரம் தாண்டும் சூழ்நிலை உள்ளதால், உதைத்தெழும்பப் பயன்படும் பலகைக்கும் மணற் பரப்பிற்கும் உள்ள இடைப்பட்ட துாரம், அந்தப் போட்டியில் பங்கு பெற இருக்கின்ற போட்டியாளர்களின் திறமையைப் பொறுத்தே வைத்துக் கொள்ளலாம்.

பெரிய அளவில் நடக்கும் போட்டிகளில், பலகைக்கும் மணற் பரப்பு தொடங்குகின்ற இடத் திற்கும் உள்ள தூரம் 36 அடியிருக்கும். ஆ கவே, இந்த விதிக்குட்பட்டுதான் இருக்க வேண்டும் என்று பள்ளிகளில் எல்லாம் முடியாது. நிலைமைக்கேற்றபடி பலகையைப் பதித்துக் கொள்ளவும்.

மும்முறைத் தாண்டும்போது, ஊன்றப்படும் காலைத் தவிர, பின் தொடர்ந்து வரும் கால், எக்காரணத்தை முன்னிட்டும் தரையைத் தொடக் கூடாது. அவ்வாறு தொட்டால், அவரது முயற்சி 'தவறானது' என்று, அவரது தாண்டும் வாய்ப்பை அளக்காமல் விட்டுவிட வேண்டும்.

மற்ற விதிகள் எல்லாம் நீளத் தாண்டலுக்கு உள்ளவைகள் தான். அவைகளைப் பின்பற்றவும்.

நீளத் தாண்டலிலும், மும்முறைத் தாண்டலிலும்இருவர் ஒரே (நீளம்) அளவுள்ள தூரம் தாண்டி, சமநிலை வந்து சிக்கல் எழுந்தால் எப்படி சமாளிப்பது?