பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். நவராஜ் செல்லையா [] 113

 எறிகின்ற உடலாளர், தனது விருப்பம் போலவே ஒரு கையாலோ அல்லது இரு கைகளாலோ இரும்புக் குண்டின் கைப்பிடியைப் பிடித்து எறியலாம்.

கைப்பிடியைச் சுற்றுவதற்காகவும், சரியான பிடிப்பு ஏற்படுவதற்காவும் தற்காப்புத் தரும் சாதாரண கையுறைகளைப் (Gloves) பயன்படுத்துவதற்கு, உடலாளரை அனுமதிக்க வேண்டும்.

இரும்புக் குண்டை சுற்றி எறிவதற்குமுன், முதலில் சுற்றுவதற்காக, இரும்புக் குண்டை வட்டத்திற்கு வெளியே கிடக்கவைத்து, அங்கிருந்தே தொடங்கலாம். அது தவறில்லை.

சுற்றத் தொடங்கும் ஆரம்பச் சுற்றுக்களில், தரை மீது குண்டு பட்டால் அது தவறில்லை. சுற்றத் தொடங்கிய பிறகு, கட்டாயம் எறிந்தேயாக வேண்டும். எறியாமல் நிறுத்திவிட்டால், ஒது ஒர் வாய்ப்பை பயன்படுத்தியதாகவே கருத வேண்டும். ஆகவே, அவர் உறுதியாக, கட்டாயம் எறிந்தே ஆகவேண்டும்.

இரும்புக் குண்டு எறியப்பெற்று கீழே விழுந்து தரையைத் தொடுவதற்குள், இவர் தடுமாறி வெளியே வட்டத்தைவிட்டு ஓடிவந்துவிட்டாலும் சரி, கீழே விழுந்து வட்டத்திலுள்ள கோட்டை மிதித்தாலும் சரி, அந்த எறியும் வாய்ப்பு தவறானது என்றே கொள்ள வேண்டும்.

எறிவதற்காக இரும்புக் குண்டைச் சுற்றும் பொழுதோ அல்லது எறிந்த பிறகு, உயரத்தில் இரும்புக் குண்டு செல்லும்பொழுதோ இரும்பு