பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114 [] விளையாட்டு விழா நடத்துவது எப்படி?


குண்டின் கம்பியும் கைப் பிடியும் அறுந்து போனால், அதனால் எறிபவர், நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டாலும், அது தவறல்ல. மீண்டும் அவருக்கு அதே எறியும் வாய்ப்பை அளிக்க வேண்டும்.

எறியும்பொழுதும் சரி, எறி முடிந்த போதும் சரி, அவர் எக்காரணத்தை முன்னிட்டும் வட்டத்திற்கு வெளியேயோ, அல்லது வட்டத்தின் கோடுகளையோ தாண்டவே கூடாது. கோட்டை மிதிக்கவோ, முழுதையும் மிதித்து மறுபுறம் உள்ள தரையைக் தொடுவதோ தவறாகும்.

ஒவ்வொரு உடலாளருக்கும் முதலில் மூன்று முறை எறிகின்ற வாய்ப்புக்கள் உண்டு. அவர்களில் அதிக தூரம் எறிந்த ஆறுபேர் தேர்ந்தெடுக்கப் படுவார். அவர்களுக்கு மீண்டும் மூன்று வாய்ப்புகள் உண்டு.

இவ்வாறு பெற்ற ஆறு வாய்ப்புகளில், எவர் அதிக தூரம் எறிந்திருக்கின்றாரோ, அவரே வெற்றி பெற்றவராவார்.

7. தட்டெறிதல் (Discus Throwing) 8' 25 "(250 மீட்டர்) விட்டமுள்ள வட்டத்திற் குள்ளேயிருந்தே எறிய வேண்டும்.

ஒரு கையினால் தட்டைப் பற்றிக்கொண்டு எறியலாம். வட்டத்திற்குள்ளேயும் சுற்றிச் சுற்றி வேகமாக சுழன்று (Pivot) தட்டை எறியலாம்.