பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. விழாநாளும் வேண்டிய பொருட்களும்


திர்பார்த்துக் கொண்டிருந்த ஏற்றமிகு விழா நாள் வருகின்றது. எத்தனை எத்தனையோ பணி களை ஆற்றிக் கொண்டிருந்த நெஞ்சங்கள், எப்படி எப்படியெல்லாம் நடக்குமோ என்ற எண்ணத்துடன் போராடிக் கொண்டிருக்கின்றன. நடையிலே வேகமும், நினைவிலே தாகமும் மிஞ்ச, விழாக் குழுவினர் அங்குமிங்கும் எண்ணம் அலைபாயச் செல்கின்றனர்.

பந்தய மைதானத்தைச் சுற்றி, வண்ணக் கோலங் களும், வளைவுகளும், வண்ணத் தாள்களும் பட படத்து, அழகைக் காட்டி நிற்கின்றன. எழுச்சிமிக்க விழாவல்லவா! இளைஞர்களும் தங்கள் திறமையைக் காட்ட தருணத்தையல்லவா நோக்கிக் கொண்டிருந் தனர். அந்த நாளும் வந்துவிட்டது.போட்டிக் களத்தை நோக்கிப் புறப்பட்டு விட்டனர்.

நாம், அதற்குள் வேண்டிய பொருளெல்லாம் சேகரிக்கப்பட்டு விட்டனவா அல்லது ஏதாவது விடுபட்டுப்போயினவா என்பதை அலசி ஆராய்ந்து பார்த்துவிடுவோம். விழா ஆரம்பம் ஆன பிறகு,