இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
118
விளையாட்டு விழா நடத்துவது எப்படி?
இடையிலே போய், தேவையான பொருட்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாதல்லவா! ஆகவே, ஒவ்வொரு போட்டிக்கும் வேண்டிய பொருட்களை வரிசைப்படுத்தி விடலாம்.
ஒட்டப் பந்தயக் களத்திற்குத் தேவையான பொருட்கள்:
1. கையால் உருட்டுகின்ற கல்லுருளை (Roller)
அவ்வப்போது ஒடும் அல்லது தாண்டும் பாதையை சமமாக உருட்டி விடவும், எறிந்து பள்ள மாகி விடுகின்ற இடங்களை சரிசமதளமாக வைத் திருக்கவும், சீராக ஆக்கவும் உதவும்.
2. தண்ணிர்த் தெளிக்கின்ற நீர்க்குழாய் (Hose)
வெயிலடித்துப் புழுதி கிளம்பாமல் பார்த்துக் கெள்ளலாம். தாண்டப் பயன்படும் மணற்பரப்பு சிறிதளவு ஈரமானதாக மேற்பகுதியுடன் இருந்தால் தான், குதிக்கின்ற இடத்தைச் சரியாகக் கண்டு பிடிக்கவும், அளக்கவும் இயலும். ஆகவே, தண்ணிர்க் குழாய் மிகவும் உதவியாக இருக்கும்.
3. குப்பைத் தொட்டி
மனிதர்கள் அதிகம் கூடி விட்டால், அங்கே எது எதுவோ நடக்கும் என்பார்கள்.அதிகமாகக் குப்பையும் சேர்ந்துவிடத் தொடங்குமே! அதனால், அவ்வப் போது குப்பை கூளங்கள், காகிதம் முதலியவற்றைச் சேகரித்து, ஒரிடத்தில் கொட்டி வைக்க இரண்டு