பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எஸ். நவராஜ் செல்லையா

119


குப்பைத் தொட்டிகள் இருந்தால், பந்தய மைதானத்தை சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக் காக்க உதவும்.

4. களைக்கொத்தி அல்ல சிறு மண்வெட்டி (Spade)

ஒட உதவும் சாதனத்தை (Starting Block) தரை யிலே பதிப்பதற்காகவும், தேவையானபோது கொடி களை நட மற்றும் சிறு குழிகளைத் தோண்டவும் களைக் கொத்திகளும் மண் வெட்டிகளும் உதவும்.

5. நூல் கயிறும் ஆணிகளும்

உடலாளர்கள் அங்குமிங்கும் நடப்பதாலும், அதிகாரிகள் மற்றும் பலர் குறுக்கே நடப்பதாலும், ஒடும் பாதை அழிந்துபோக ஏதுவாகும். ஆகவே, அதிக நீளமான நூல் கயிறும், அதை ஊன்றிப் பிடித்துக்கொள்ள ஆணிகளும் இருந்தால், விரை வாக கோடுகளை போட்டு வேகமாக நிகழ்ச்சி களையும் நடத்த முடியும். பந்தயப் பாதையை மீண்டும்திருத்தியமைத்தால், தெளிவாகக் கோடுகள் தெரியும்.

6. கோடுகளைப் போட சுண்ணாம்புக் கூடையும்.

சுண்ணாம்பை ஒரு பெரிய கூடையிலே சேமித்து வைத்துக் கொண்டால், வேண்டும் என்று பலர் கேட்கிற பொழுது, அள்ளிக்கொண்டு சென்று தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம். அள்ளிச் செல்வதற்கு சிறிய தட்டுகள் இருந்தாலும் வைத்துக் கொள்ளலாம்.