120 விளையாட்டு விழா நடத்துவது எப்படி?
7, 4 அடி உயரமுள்ள இரு கம்பங்கள்.
ஒட்டப்பந்தய முடிவெல்லைக் கோட்டில் இருபுறமும் நிறுத்தி வைக்கப்படுகின்ற கம்பங்கள், வெள்ளை வண்ணப் பூச்சுடன் இருக்க வேண்டம்.
8. கம்பளி நூற் கயிறு.
முடிவெல்லைக் கோட்டில், இரு பக்கமும் இருவர் இருந்து பிடித்துக் கொண்டு நிற்கப் பயன்படும் கயிறு, சரியான முடிவினைக் காட்ட உதவும்.
மேற்கூறிய பொதுவான உதவி சாதனங்களை வைத்துக் கொண்டு, பந்தய விழா தொடங்குவதற்கு முன்னமே, 'பந்தயப் பாதைகள் நன்கு உருட்டப்பட்டு, தெளிவான சுண்ணாம்புக் கோடுகள் இடப்பட்டு இருக்கின்றனவா ஒட்டப் பந்தயத் தொடக்கக்கோடு, முடிவெல்லைக் கோடுகள் தொடரோட்டப் போட்டி யின் குறுந்தடி மாற்றிக்கொள்ளும் எல்லைப் பகுதிகள், தடைகளை வைக்கின்ற இடங்கள் எல்லாம் சரியாக அளந்து வைக்கப்பட்டிருக்கின்றனவா” என்று பந்தயத் திடலைப் பார்வையிட்டு விட்டு, அதி காரிகளுக்குத் தேவையான பொருட்களையும் கவனிப்போம்.
1. விசில்கள் (12)
2 .நிறுத்துக் கடிகாரங்கள் (3) 3.கம்பளி நூல் 4.(ஒட விடும் ஒலி தருகின்ற) துப்பாக்கி (1)
5.துப்பாக்கிக்கான மருந்துத் தக்கைகள் (Carridges)