பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



எஸ். நவராஜ் செல்லையா

[] 125



நடத்தும் பொறுப்புள்ள அதிகாரிகள் வந்த வண்ண மிருப்பார்கள். அவர்களை, விழா தொடங்குவதற்குக் குறித்த ஒரு மணி நேரத்திற்கு முன்னமேயே, வந்து விடுமாறு கட்டளை கொடுத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான், அவரவர் ஆற்றவேண்டிய கடமை களைப் பற்றியும், இறுதியாகக் குறிப்புரைகளும், அறிவுரைகளும் தருவதற்கு ஏதுவாக இருக்கும்.

1. நடுவர்கள் (2) 2. ஒட விடுபவர் (1) 3. நேரக்காப்பாளர் (3) 4. முடிவெல்லைத் துணை நடுவர்கள் (4) 5. கள நிகழ்ச்சிக்குரிய துணை நடுவர்கள் (8) 6. ஒடவிடுபவரின் உதவியாளர்கள் (2) 7. அறிவிப்பாளர் (1) 8 குறிப்பாளர் (1)

இவர்கள் எல்லோரும் வந்துவிட்டார்களா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். வந்தவர் களுக்கு உடனே, விழாவுக்குரியதென வைத்திருக் கும் அடையாள அட்டையைக் (Bage) கொடுத்து, அணிந்துகொள்ளுமாறு செய்தல் வேண்டும். அப் பொழுதுதான், விழா நிகழ்ச்சிகளை நடத்தும் அதிகாரிகள் யாரென்று விழாக்குழுவினருக்கும் புரியும். பொதுமக்களுக்கும் உடலாளர்களுக்கும் தெரியும்.