126 [] விளையாட்டு விழா நடத்துவது எப்படி?
இதற்குப் பிறகு உடலாளர்கள் போட்டியிடுதற் குரிய அடையாளமான எண்களை’ (NUmbers) முன்கூட்டியே, கொடுத்திருந்தால், பரவாயில்லை. இல்லையேல், போட்டியாளர்களின் பயிற்சியாளர் களை அழைத்து, அவர்களிடம் உரிய எண்களையும், அவற்றைப் பனியனில் சரியாக அதிகாரிகளுக்குத் தெளிவாகத் தெரிவதுபோல் தைத்துக் கொள்ளுமாறு குறிப்புத் தருதல் வேண்டும்.
முன்கூட்டியே திட்டமிட்டபடி, நிகழ்ச்சி நிரல் குறிப்புக்களை உடலாளர்களுக்கும், அதிகாரி களுக்கும் கொடுக்க வேண்டும். இன்னும், விழா நிகழ்ச்சிகள் பற்றிய நடைமுறைகளையும், நேரமும், மற்றும் விதிமுறைகள் அடங்கிய குறிப்புக்களையும் தருதல் சிறப்பாகும்.
இதற்குள் அதிகாரிகளும், உடலாளர்களும் விழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்ற குறித்த நேரத்தில், பந்தயத் திடலில் கூடிவிடுவார்கள்.
அறிவிப்பாளர், உடலாளர்கள் அனைவரையும் அவரவர்கள் குழுவிற்கு ஏற்ப அணிவகுத்து நிற்க வேண்டும் என்று அறிவிக்க வேண்டும்.
எல்லா போட்டிக் குழுக்களும் தங்கள் உடலாளர் களை அணிவகுத்து நிறுத்தியவுடன், அணிவகுப்புத் தொடங்குகிறது. அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ள முக்கியமான ஒருவர் வரவழைக்கப் பட்டிருப்பார். அந்தக் குழுவுக்குரிய கொடியுடன், குழுவின் தலைவன் முன்னால் வர, அணிவகுப்பு