பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். நவராஜ் செல்லையா

[]127


நடைபெறும் அணிவகுப்பின் மரியாதையை சல்யூட் செய்தபடி, 'விருந்தாளர்' ஏற்றுக்கொள்கிறார்.

எல்லா வீரர்களும் வீரநடை போட்டபடி இவ்வாறு மரியாதை செய்தவுடன், பந்தய விழாத் திடலில் குறித்த இடங்களில் வந்து வரிசையாக நிற்பார்கள்.

வந்து எல்லோரும் வரிசையாக நின்றவுடன், 'இந்த விழாவைத் தவக்கி வைப்பதில் நான் பெருமையடைகிறேன்’ என்று மரியாதையை ஏற்றக் கொண்டவர் மொழிந்து, விழாவைத் துவக்கிவைக்கின்றார். உடலாளர்களும், அதிகாரிகளும் கைதட்டி வரவேற்று மகிழ்கின்றனர்.

பெரிய அளவில் விழா நடந்தால், விழாவுக்குரிய கொடி ஏற்றி வைக்கப்படும். குண்டுகள்முழங்கும்.புறாக்கள்பறக்கவிடப்பெறும். எத்தனையாவது ஆண்டு விழா என்ற கணக்கின்படி துப்பாக்கிகள்முழங்கும்.

அதற்குப் பிறகு, பந்தயத் திடலைச் சுற்றி 'பந்தயச் சுடரை' ஏந்திக்கொண்டு ஒர் உடலாளர் ஓடிவந்து' அந்தச் சுடரை ஏற்றி வைக்கின்றார்.

இந்த நிகழ்ச்சி நடைபெற்றதும், விழாக் குழுவினர் முன்கூட்டியே திட்டமிட்டுக் குறித்து வைத்த ஒர் உடலாளர், மேடைக்கு வந்து, விழாவுக்குரிய வீர உறுதிமொழிகளை வாசிப்பார்.