பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். நவராஜ் செல்லையா L 129 நிகழ்ச்சி நிரல் குறிப்பின்படி ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க வேண்டும். அறிவிப்பாளர் (Anouncer): அறிவிப்பாளரின் பணியிலே தான், விழாவின் சுறுசுறுப்பும் விறு விறுப்பும் அடங்கிக் கிடக்கிறது. பொது மக்களுக்கும் பார்வையாளர்களுக்கும், அவ்வப்போது நடக்கின்ற செய்திகளையும், நடக்கப் போகின்ற நிகழ்ச்சி களையும் சுவையாகவும் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறி, பார்வையாளர்களைப் பந்தய நிகழ்ச்சிகள் மீதே கண்ணுங் கருத்துமாகவும் ஆர்வமுடன் இருக்கவும் வைக்க வேண்டும். உயரத் தாண்டுதல், கோலுரன்றித் தாண்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும்போது, அதன் உயரம் என்ன, அதிக உயரம் தாண்டுகின்ற உடலாளர் யார், அதற்கு முன்னே உள்ள வெற்றிச் சாதனை என்ன என்பன போன்ற விவரங்களைக் கூறிக் கொண்டே வந்தால்தான் பார்வையாளர்கள் ஆர்வங் குன்றாமல் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சியும் குறித்த நேரத்தில் நடைபெறுவதற்கு அறிவிப்பாளரே உதவுகின்றவ ராவார். நிகழ்ச்சியைக் கூறி, அந்நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகின்ற உடலாளர்களை உடனே வரும்படி அழைப்பது அவரது கடமையாகும். இவரோடு தொடர்புடைய இன்னொரு முக்கியமான பொறுப்புள்ள அதிகாரி குறிப்பாளர்' (Scorer) -gauff. *