பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ். நவராஜ் செல்லையா [] 11

 எப்படி நடக்கும் என்று நாம் கேட்கவே வேண்டியதில்லை. அது நடந்தேதான் தீரும்.

விளையாட்டு விழாவை இளமை விளையாடும் மேடை என்கிறோம். போட்டியில் பங்கு பெறுகின்ற பருவத் துடிப்புள்ள காளையர்கள், அவர்களது அரிய இளமைக்கு அணையாகவும் முனையாகவும் இருந்து, காட்டாற்று வெள்ளத்தைக் கரைகட்டிக் கழனிக்குப் பாய்ச்சுவது போலப் பணியாற்றும் பயிற்சியாளர்கள்; பந்தயம் நடத்தும் அதிகாரிகள்; பார்த்து மகிழ வந்த பார்வையாளர்கள்.

மேலே கூறிய நான்கு வகையினருமே ஆர்வத்துடனும், நெஞ்சம் முழுமையும் ஈடுபடுத்திப் பணி புரிகின்ற இடமே விளையாட்டு விழா போட்டியாளர்கள் வெற்றி பெறுவதிலேயே குறியாக இருப்பார்கள். போட்டியாளர்களின் தலைவர்கள், பிறரை வெற்றிபெற விடாமல் தங்களது ஆட்களை எவ்வாறு வெற்றிபெற வைக்கலாம் என்பதிலேயே கண்ணுங் கருத்துமாக இருப்பார்கள்.

நோக்கத்திலே நுணுக்கம் தோன்றியவுடன், செயலிலே வேகம் இருக்குமல்லவா! வேகமாகச் செயல்படும்போது, அதற்குரிய விழாவில், தேவையான அனைத்தும் தயாராக இருந்தால்தான், திறமையான ஆக்கப்பணி முழுமை பெறும்.

இல்லையேல், அரைகுறையாக வெந்தசோறு எப்படி பசி தீர்க்கப் பயன்படாதோ, அதுபோலவே அரைகுறை செயலாக்கமும் ஆக்கவேலைக்கும், அனைத்து வெற்றிக்கும் துணைவராது.