பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130口 விளையாட்டு விழா நடத்துவது எப்படி? குறிப்பாளர்: வெற்றி பெறுகின்ற உடலாளர்களின் பெயர்களை எழுதி, அவர்கள் எந்த நிழ்ச்சியில் வெற்றி பெற்றார்கள், அவர்களின் வெற்றிச் சாதனை என்ன என்ற விவரங்களையும் தெளிவாக எழுத வேண்டும். வெற்றி வீரராக (Champion) வரக்கூடியவர் களுக்குரிய பதிவுத் தாளை வைத்து அதில் குறித்து, அவரவர் பெற்ற வெற்றியையும் அதற்குரிய வெற்றி எண்களையும் குறித்துத் தயாராக வைத்திருக்க வேண்டும். குறிப்பாளர் எழுதி வைக்கும் குறிப்பிலும், பொறுப்பிலுந்தான், விழா நிகழ்ச்சிகளின் இறுதிக் கட்டம் விமரிசையாக நடக்க வாய்ப்பு இருக்கின்றது. இறுதியாக, அதிகாரிகளுக்கு ஒரு சில முக்கியக் குறிப்புக்கள். - ஒட்டப் பந்தயமாக இருந்தால், ஒட விடுபவர் உடலாளர்களைத் தயாராக இருக்கச் செய்து விட்டு, வட்டக் குறிப்பாளர்களையும் இன்னும் மற்றவர் களையும் கவனத்துடன் இருக்க செய்த பிறகே ஒட்டப் பந்தய நிகழ்ச்சியைத் தொடங்க வேண்டும். ஒட்டப் பந்தயத்தின் தொடக்கத்திற்காக உட லாளர் வந்து நின்ற பிறகு, அவர்களின் உதவி யாளர்கள் யாரும் அவர்களுக்கு அருகில் வந்து நின்று கொண்டு அவர்களுக்கு அறிவுரையோ, குறிப்புரையோ எதுவும் தரக்கூடாது. எந்தவிதமான உண்ணும் உணவுப் பொருளோ, அல்லது குடிக்கும்