பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 [] விளையாட்டு விழா நடத்துவது எப்படி? படையைப் பவுண்டாகவும் கணக்கிட்டுக் கூட்டி மொத்தத்திலிருந்து மாணவர்களின் ஆற்றலைத் தரமாக்கிப் பிரிக்கின்றனர். இவ்வாறு மேல் நிலையாளர் (Senior), இள நிலையாளர் (junior), சிறுவர் (Sub-Jounor) எனப் பிரித்துக் கொண்டு போட்டிகளை நடத்துகின்றனர். இத்தகைய முறைகள் பள்ளிகளில் பயிலும் மாணவர் அனைவரும் போட்டியில் சம ஆற்றலுள்ளவர் களுடன் போட்டி போடவும், வெற்றிபெறவும் போன்ற இனிய சூழ்நிலையைத் தோற்றுவிக்கத்தான். ஆகவே, போட்டியிடுபவர்களைப் பிரிக்கப் பயன்படுத்துகின்ற முறையினை, விழாக் குழுவினர் முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும். அப் பொழுதுதான் பின்னர் குழப்பம் ஏற்படாமல் தடுக்க முடியும். போட்டியாளர்களைப் பிரித்த பிறகே, அவர்களுக்கென்று என்னென்ன நிகழ்ச்சிகளை வைக்கலாம் என்ற முடிவினைச் செய்ய முடியும். நிகழ்ச்சிகளைப் பற்றிய முடிவெடுக்கு முன்னர் பள்ளிக்குரிய பந்தயத் திடல், அவர்களுக்குக்கிருக்கின்ற தேவையான விளையாட்டு சாதனங்கள், பொருட்கள், மாணவர்களின் ஆற்றல் அனைத்தையும் ஆராய்ந்தே முடிவு செய்ய வேண்டும். மாநில அளவிலும், மற்றும் பெரிய அளலும் நடக்கின்ற உடலாண்மைப் போட்டிகளில் வைக்கப் பெறுகின்ற போட்டி நிகழ்ச்சிகளை முதலில் காண்போம்.