பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். நவராஜ் செல்லையா [] 135

ஒரு சில விழாக்களில், பன்முறைப் போட்டி களில் பங்கு பெறுகின்ற வாய்ப்பினையும் தருகின் றார்கள். அந்த போட்டிகளில், ஒன்று ஐந்து போட்டி களிலும், இன்னொன்றில் பத்துப் போட்டிகளிலும் பங்கு பெற்று, அதிக வெற்றி எண்களைப் பெறு கின்றவரே வெற்றி வீரர் என்ற விருதினைப் பெறவும், வீறுடன் விளங்கவும் செய்கின்றனர்.

ஐந்து நிகழ்ச்சிகள் (Pentatelon) என்றால் நீளத்தாண்டல், வேலெறிதல், 200 மீட்டர் விரை வோட்டம், தட்டெறிதல், 1500 மீட்டர் இடைநிலை ஒட்டம் என்ற ஐந்து நிழச்சிகளிலும் ஒன்றின் பின் ஒன்றாகப் பங்கு கொண்டு, அதிக வெற்றி எண்களைப் பெற வேண்டும்.

பத்து நிகழ்ச்சிகள் (Decathlon)... இந்த பத்து நிகழ்ச்சிகளில் இரண்டு நாட்கள் தொடர்ந்தாற்போல் பங்கு பெற்று, போட்டியிட வேண்டும்.

முதல் நாளில்,100 மீட்டர் விரைவோட்டம், நீளத் தாண்டல், இரும்புக் குண்டெறிதல், உயரத்தாண்டல், 400 மீட்டர் விரைவோட்டம் என்ற போட்டிகளிலும்,

இரண்டாம் நாள், 110 மீட்டர் தடை தாண்டி ஒட்டம், தட்டெறிதல், கோலுான்றித் தாண்டுதல், வேலெறிதல், 1500 மீட்டர் இடைநிலை ஒட்டம் போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற வேண்டும்.

பெண்களுக்கும் பன்முறைப் போட்டி நிகழ்ச் சிகள் உண்டு. அவர்களுக்கும் ஐந்து நிகழ்ச்சிகள். உள்ள போட்டிதான் இருக்கும்.