பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். நவராஜ் செல்லையா [] 137

பரிசுப் பொருள் என்றதுமே, என்ன மாதிரிப் பொருட்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வருவதும், தடுமாற்றம் நிகழ்வதும் இயல்பே!

முதன் முதலில் ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதே புனிதமான காரியம் என்று போற்றப்பட்டது. அதற்கு அடையாளமாக, ஆலிவ் மலரால் ஆன வளையங்களைச் செய்து, தலையில் மலர்க் கிரீடமாகச் சூட்டி மகிழ்வித்தனர்.

பின்னர், களைப்புடன் ஒடி வந்தவர்களைப் பாராட்டி பரிசு தந்தனர் பொதுமக்கள். காலம் மாற மாற, பந்தயங்களில் வெற்றி பெற்றால் பரிசுப்பொருள் பணமாக இருக்க வேண்டும், பயன்படுகின்ற பொருட் களாக இருக்க வேண்டும் என்று போட்டியாளர்களே விரும்பினர்.

அதன் காரணமாக, மலர்க் கிரீடம் மாறியது, வாழக்கைக்கு அதிகம் தேவைப்படுகிற பணம், அழ கான பொருட்கள். அடையாளச் சின்னங்கள் (Badges), சான்றிதழ்கள், அங்கங்களில் அணியப் பெறும் ஆபரணங்கள், தங்கநகைகள் முதலியன இடம் பெற்றன.

பிறகு, இன்பத்திற்காகவும், பொழுது போக்குக் காகவும் நடைபெறுகின்ற விளையாட்டு விழாக்கள், சூதாடுமிடம்போல பொருட்களை எதிர்பார்த்து நடக்கக் கூடாது என்ற எதிர்ப்பின் காரணமாக போட்டியிடும் உடலாளர்களைக் கெளரவப்படுத் தும், போட்டியில் கலந்து கொண்டதற்கான ஒர்