பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



138 [] விளையாட்டு விழா நடத்துவது எப்படி?


அடையாளச் சின்னம்போல, ஏதாவது அதிகம் விலையில்லாத ஆனால், ஒர் தரமான விலையுள்ள தான பதக்கங்களைத் தரலாம் என்றவொரு முடிவுக் கும் வந்தனர்

அதன்படியே, முதலாவது பரிசுக்குத் தங்கப் பதக்கமும், இரண்டாவது பரிசுக்கு வெள்ளிப் பதக்கமும் மூன்றாவது பரிசுக்கு வெண்கலப் பதக்கமும் கொடுக்கத் தொடங்கினர்.

மற்ற விழாக்களிலே, முன்னாள் ஒலிம்பிக் பந்தயங்களில் வீரர்களுக்கு மது வழங்கிய கோப்பை களின் அமைப்பு போன்ற கோப்பைகளைப்(cups)பரிசாகத் தரவும் ஆரம்பித்தனர். அந்தப் பழக்கமே இன்று பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பொது நிறுவனங்களிலும் பரிசுக் கோப்பைகள் தருகின்ற முறையில் பரவத் தொடங்கியது.

நாளாக நாளாக,' வெறும் கோப்பைகள் இளைஞர்களின் வாழ்க்கைக்கு உதவுவதில்லை. வாழ்க்கைக்குப் பயன்படும் பொருட்களை வழங் கினால், அவர்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கும் உ(cups)தவும், அவர்களுக்கு மீண்டும் போட்டியிடுகின்ற ஆர்வத்தையும் கொடுக்கும், ஆனந்தத்தையும் அளிக்கும்’ என்று எண்ணி பள்ளி மாணவர்களுக்குப் பரிசுப் பொருட்களான பேனா, சீப்பு, சோப்பு, கண்ணாடி போன்ற பொருட்களை வாங்கிப் பரிசாக அளித்தனர்.