பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140 [ ] விளையாட்டு விழா நடத்துவது எப்படி?


ஆகவே, அத்தகைய நிலை வரவேசுடாது என்பதற்காகத்தான், இத்தனை காரியங்களையும் திட்டமிட்டு, ஆர அமர ஆலோசித்து செய்தபடி, இந்தப் பரிசு தரும் நிகழ்ச்சியும் பக்குவமாக செய்து வைக்க வேண்டும் என்கிறோம்.

விழாவின் இறுதிக் கட்டமும், முயற்சியின் இறுதிக் கட்டம்தானே! ஆக்க வேலையினை ஊக்கு வித்தாலும் ஒற்றமையாலும் ஊறு ஏதும் நிகழாமல் நடந்ததற்காக ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டே, விழா நிகழ்ச்சிகள் பற்றிய விமர்சனத் துடன், வெற்றி பெற்ற விதத்தைப் பெரிதுபடப் பேசி மகிழும் இன்ப நேரமல்லவா அது!

ஆகவே, விழாக் குழுவினர் இத்தனை நிகழ்ச்சி களையும் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் போது கீழே விழுதல், கைகால் பிசகுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருந்தால் நல்லது. மீறி நடந்தால் முதலுதவி செய்வதற்காக, ஒரு மருத்து வரை வரவழைத்து, வைத்திருப்பது நல்லது. முதலு தவிப் பொருட்களையும் வைத்திருக்க வேண்டியது மிகமிக முக்கியமாகும்.

“பெரும் பொறுப்பும், பேராண்மையும், சீரிய ஒற்றுமையும் சிறப்பான செயலூக்கமும் மனிதர் களுக்குத் தேவை” என்ற உண்மையை உலகுக்கு உணர்த்துவதற்காகவே, உடலாண்மை நிகழ்ச்சிகள் உருவாயின. அதன் வழியே மக்களினம், தொடர்ந்து விளையாட்டு விழாவை நடத்தி, மாபெரும் மகிழ்ச்சிக்