பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 [] விளையாட்டு விழா நடத்துவது எப்படி?

 விரும்பி ஒரே ஆர்வத்தோடு போட்டிகளில் தங்கள் முழுத் திறனைக் காட்டிப் பங்கு பெற வேண்டுமானால், பந்தயத் திடலானது விழாவின் போட்டிக்குத் தேவையான சாதனங்களோடு, பரிபூரணமாக அமைந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான், விழா நாம் எண்ணிய படி எல்லாம் நடக்கும். வெற்றியைக்கொடுக்கும்.

ஒடும் போட்டிகளுக்கான குறிப்புகள் கிடைத்திருக்கும் பந்தயத் திடலில், 400 மீட்டர் சுற்றளவுள்ள பந்தயப்பாதை (Track) அமைக்க முடிந்தாலும் சரி, அல்லது 200 மீட்டர் உள்ள 'ஒடும் பாதை’ கிடைத்தாலும் சரி, அதைக் கணக்காவும் ஒழுங்காகவும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

400 மீட்டர் உள்ள பந்தயப் பாதை அமைந்த திடல்தான் சிறந்த போட்டியை நடத்தும் தரமான 'ஒடுகளமாக அமையும் என்றாலும், நமக்குக் கிடைத்திருக்கின்ற இடத்திற்கு ஏற்பத்தானே காரியம் ஆற்ற முடியும்? இல்லாததற்காக ஏங்கிக் கொண்டிருந்தால் காரியம் நடந்தாக வேண்டுமே!

பந்தயப் பாதை (Track) என்பது நேராக உள்ள 2 நீளப் பகுதியும், 2 வளைவுள்ள (Curve) வட்டப் பகுதிகளும் அமைந்ததாகும். இதை, மைதானம் கிடைக்கின்ற பரப்பளவை வைத்துக் கொண்டுதான் நீள அகலத்தை நிர்ணயிக்க முடியும்.

பந்தயப்பாதை அமைக்கின்ற இடத்தை சமதள மாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.