பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எஸ். நவராஜ் செல்லையா [] 21


மேடுபள்ளம் இருந்தால், விரைவாக ஒடும் வீரர்களின் கால் தடுமாறவும், கணுக்கால் பிசகிக் கொள்ளவும் கூடும். ஆகவே, முடிந்தவரை மேடுபள்ளம் இல்லாத சமதரையாகப் பார்த்து ஒடும் பாதையை அமைப்பது நல்லது.

நேராக உள்ள நீளப் பகுதிகள் (Straight) எப்பொழுதும் வடக்குத் தெற்குத் திசை பார்த்து இருப்பது போல அமையவேண்டும். அவ்வாறு அமைவது ஒடுவோருக்கும் மற்றவர்களுக்கும் சூரியனை நேருக்கு நேர் நோக்கிக் கண் கூசுகின்ற சிரமத்தைக் கொடுக்காமல் இருக்கும்.

பந்தயப்பாதை அமைகின்ற தரையானது (Ground) அதிகப் பாறைப் பகுதியாக இருந்தாலும், கடினமான கட்டாந்தரையாக இருந்தாலும், பற்றிப் படர்ந்திருக்கும் பசும்புல் தரையாக இருந்தாலும், பங்குபெறுவோரின் கால்களுக்கு வலியை உண்டாக்கி விடும். புல்லில் கால் சிக்கிக் கொள்ளவும் கூடும்.

மென்மையான தரைப்பகுதியாகவோ, மணற்பகுதியாகவோ இருந்தால், ஒடுவோர் கால்கள் பதிவதால் நிகழ்ச்சிகளில் ஏற்படக்கூடிய வெற்றிச் சாதனை” (Record) குறைகின்ற சூழ்நிலையும் தோன்றும்.

பந்தயப் பாதையின் உள் அளவுள்ள கோடானது 2 அங்குலம். உயரத்தில் இருப்பதுபோல, ஏதாவது சிமிண்டினாலோ அல்லது மரக்கட்டையினாலோ, அல்லது முடிந்தால் நூல் கயிற்றினாலோ கட்டி