பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். நவராஜ் செல்லையா 33

உதவும் கோலுக்கு, எந்தவிதமான விரிசலோ உடை சலோ ஏற்படக்கூடாது என்பதே அடிப்படை நோக்கம்.

கோலுான்றும் பெட்டி (Vaulting Box) மரத்தால் அல்லது ஏதாவது ஒரு உலோகத்தால் செய்யப் பட்டிருக்க வேண்டும்.

அதன் உள்ளளவு தரையின் சம அளவு நிலைக்கு (1 மீட்டர் 3'3¼”) உள்ளதாகவும், முன் அளவின் அகலம் (600 மி.மீ)1' 11/3" உள்ளதாகவும், பின் அளவின் அகலம் (150 மி.மீ) 6” உள்ளதாகவும், அமைந்திருக்க வேண்டியது மிகமிக அவசியம்.

தரைக்குள்ளே பதிக்கப்படுகின்ற பெட்டியின் அமைப்பு தரையளவாகவே இருக்க வேண்டும். அவ்வாறு அமைக்கின்ற தரையின் அளவுக்கும் பெட்டியின் கடைப்பாகத்திற்கும் இடைப்பட்ட சாய்வு 105 டிகிரியில் அமைந்திருப்பதுபோல் அமைக்கவும்.

அவ்வாறு சாய்ந்திருக்கும் பெட்டியின் அளவு 7¼” (200 மி.மீ.) பெட்டியின் கடைசி இடத்தைத் தொடும் போது இருக்க வேண்டும்.

பெட்டியினுடைய பக்கங்களின் சாய்வளவு 120 டிகிரி உள்ளதா என்பதையும் பார்த்துப் பெட்டியைப் பதிக்க வேண்டும்.

பலகையிலே பெட்டி செய்யப்படுகின்ற பொழுது, பெட்டியின் உள்ளே அமைந்திருக்கும் முன்பாகமானது (2.5 மி.மீ.) 0.1" கனம் உள்ளதாக