பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 [. விளையாட்டு விழா நடத்துவது எப்படி?

இரும்புத் தகட்டினால் (800 மி.மீ.) 2'7½" நீளம் பதிக்கப்பட்டிருப்பது போல் செய்ய வேண்டும்.

கோலூன்றித் தாண்ட வேண்டி யிருப்பதால், பங்கு பெறுகின்ற வீரர்கள் அதிக உயரம் தாண்டக் கூடிய போட்டியில் அடிக்கடி ஏற்றிவைக்க உயரமான சூழ்நிலை அடிக்கடி அமையும். ஆகவே, இரண்டு பக்கமும் ஏறி நின்று குறுக்குக் குச்சியை அடிக்கடி ஏற்றி வைக்க ஏணி போன்ற அமைப்புள்ள இரண்டு சாதனங்கள் தேவைப்படும்.

1.எறியும் போட்டிகள் (Short Put) இரும்பால் அல்லது பித்தளையால் அல்லது அதற்கு இணையான வேறு எந்தப் பொருட்களி னாலாவது, உருண்டை வடிவமானதாகவும், மழமழப், பாகவும் வழவழப்புள்ளதாகவும் இரும்புக் குண்டு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆண்கள் போட்டியில் எறியக்கூடிய இரும்புக் குண்டின் எடை 16 பவுண்டாகும். பெண்களுக்கு 8 பவுண்டு 13 அவுன்சு எடையுள்ளதாக இருக்க வேண்டும்.

பள்ளியில் 12 பவுண்டுகள் இரும்புக் குண்டை பயன்படுத்துகின்றார்கள். கல்லூரிகளில் 16 பவுண் டுள்ள குண்டுதான் பயன்படுகின்றது.

3½அடி ஆரமுள்ள வட்டத்திலிருந்து தான் இரும்புக் குண்டினை எறிய வேண்டும். ஆகவே,