பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். நவராஜ் செல்லையா [] 35

அந்த வட்டத்தின் சுற்றளவுக் கோட்டைத் தெளிவாகத் தெரியும்படி சுண்ணாம்புக் கோட்டினால் போட வேண்டும்.

4 அடி நீளமும், 4.5 அங்குல அகலமும், 2 அங்குல கனமும் உள்ள 'தடைப் பலகை '(Stop Board) ஒன்றை, வட்டத்தின் முன் பகுதியில் சுண்ணாம்புக் கோட் டிற்குப் பதிலாக பதித்திருக்க வேண்டும்.

அந்தத் 'தடைப் பலகையின்' அளவிலேயே இரும்புக் குண்டை எறியும் பரப்பான (கோண) அளவிலேயே கோடுகளை சுண்ணாம்பால் போட்டு, நீட்டி விட வேண்டும்.

இருபுறமும் போடப்பட்டிருக்கும் கோணங்களை காட்டுவதுபோல் அமைந்து இரண்டு கோடுகளையும் இணைப்பதுபோல, 25', 30', 35', 40' என்ற அளவில் அளந்து, ஆரம் வைத்து வட்டமிடுவதுபோல், இணைத்து விடவேண்டும்.

இதேபோல் அமைந்த கால் வட்டப் பரப் பிற்குள்ளேதான் இரும்புக் குண்டினை எறிய வேண்டும்.

2. இரும்புக் குண்டு வீசியெறிதல் (Hammer Throw) 3 அடி 10 அங்குல நீளத்திலிருந்து 3¼ அடி 11¼அங்குலம் வரை ஏதேனும் நீளமுள்ள இரும்புக் கம்பியினால் சேர்க்கப்பட்டிருக்கும் இரும்புக் குண்டு, நல்ல இரும்பினால் பித்தளையால் அல்லது அதற்கு இணையான எடையுள்ள ஏதாவது பொருளால் உருண்டை வடிவமாக செய்யப்பட்டிருக்க வேண்டும்.