பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
36 [] விளையாட்டு விழா நடத்துவது எப்படி?


அந்த நீண்ட உறுதியான கம்பியும் முடிச்சில்லாத தாகவும், ஒரே நீளமானதாகவும் இருந்து, சுற்றி எறிகின்ற அமைப்புள்ள கைப்பிடி ஒன்றுடன் இணைக்கப் பெற்றிருக்க வேண்டும்.

சுற்றி வேகமாக எறியும்போது துவள்கின்ற தாகவோ, சுருங்கி நீளுகின்றதாகவோ உள்ள தன்மையில் கம்பி இருக்கக்கூடாது. அதே சமயத்தில், எறியப்பெற்ற இரும்புக் குண்டுடன் வெட்ட வெளியில் (Up in the Air) செல்லும்போது, இரும்புக் குண்டைத் திசை திருப்பி விடுகின்ற முறையிலே கைப்பிடியுடன் கம்பியும் இரும்புக் குண்டும் பொருத்தப் பட்டிருக்க கூடாது.

ஆகவே, இத்தகைய வழிமுறைகளுக்கேற்ற வாறு அமையப்பெற்ற வீசியெறியப்படும் இரும்புக் குண்டின் மொத்த எடை - கைப்பிடி, கம்பி, இரும்புக் குண்டு உட்பட 16 பவுண்டாகும்.

இரும்புக் குண்டை வீசி எறியப் பயன்படும் வட்டத்தின் சுற்றளவு 7 அடியாகும். அதன் சுற்றளவு உட்கோட்டின் அளவுபடி, விட்டம் 7 அடி உள்ள தாகவும், அந்த வட்டத்தையும் முடிந்தால், உலோகத் தினால் செய்து வைத்திருக்கலாம். உலோகத்தால் ஆகியிருந்தால், அது வெள்ளைப் பூச்சு (White Palnt) பூசப்பட்டடிருக்க வேண்டும். அதன் உயரம் 3 அங்குல மும் கனம் 0.25 அங்குலம் இருக்கும்படியாகவும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உலோகத்தினால் வட்டம் போடக்கூடிய வாய்ப்பும் வசதியான சூழ்நிலையும் இல்லாவிட்டால்,