பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எஸ். நவராஜ் செல்லையா [] 37


அந்த வட்டத்தின் சுற்றளவை சுண்ணாம்பினால் தெளிவாகப் போடலாம். அதில் 45° அளவுள்ள பரப்பைக் குறிப்பது போல, வட்டத்திலிருந்து இரு பக்கமும் கோடிழுத்து, அதனுள்ளேதான், எறிகின்ற எறி (Throw) எல்லாம் விழவேண்டும் என்கிற ‘எறிபரப்பை' ஏற்படுத்தி வைத்துக் கொள்வது சாலச் சிறந்தது.

3தட்டெறிதல் (Discus Throw)

வட்டமான அமைப்புள்ள தட்டானது, மரத்தால் அல்லது அதற்கு இணையான வேறு ஒரு பொருளால் ஆகியிருக்கலாம்.

ஆனால், அந்தத் தட்டின் மையப் பகுதியிலே, உலோகத் தகடு ஒன்று வட்டமாகவும் சரியாகவும் பதிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு, மையத்தில் உலோகத் தகடும் சேர்ந்த பிறகு, தட்டின் மொத்த எடையானது, ஆண்களின் போட்டிக்குரியது என் றால் 4 பவுண்டு 6.547 அவுன்சும், பெண்களின் போட்டிக்குரியது என்றால் 2 பவுண்டு 3274 அவுன்சும் எடை உள்ளதாக இருக்கும்படி அமைந்திருக்க வேண்டும்.

பெண்கள் பயன்படுத்துகின்ற போட்டிக்குரிய தட்டினையே, பள்ளிகளில் நடக்கின்ற போட்டி களுக்கும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

தட்டினுடைய விளிம்பைச் (Edge) சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் உலோகமானது, பிசிறு