பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எஸ். நவராஜ் செல்லையா [] 39


சுற்றப்படுகின்ற நூற் கயிற்றுக்குப் பதிலாக, தோல் பட்டையை வைத்து சுற்றுவதோ, அடையாளம் தெரிவதற்காக அந்த வேலினை வெட்டிவிட்டிருப் பதோ, அல்லது ரம்பப் பற்கள் போல ஒரத்தில் வெட்டி அடையாளம் செய்திருப்பது போன்ற அமைப்புக் களோ வேலில் எதுவும் இருக்கக் கூடாது.

முறையாகவும் தரமாகவும் சுற்றப்படுகின்ற நூற் கயிற்றின் கணம் 1 அங்குலத்திற்கு மேல் போகக் கூடாது. அதுவும், சீரான கன அமைப்புடனே மேலே சுற்றியிருக்க வேண்டும்.

பிடிப்புக்கு (Grip) ஏற்ப சுற்றப்பட்டிருக்கும் மையப் பகுதியில் இருந்து, உலோகம் அமையப் பெற்றுள்ள தலைப் பகுதிக்கானாலும் சரி, வால் பகுதிக்கானாலும் சரி, வேலின் குறுக்களவில் எந்தவித மாற்றமும் இன்றி, சன்னமாகவே மெலிந்து செல்வது போன்ற அமைப்புடன் வேல் செய்யப் பட்டிருக்க வேண்டும்.

வேலின் உள்ளே எந்தவிதமான அசைகின்ற பொருளோ, அல்லது எறியப்பட்டப் பிறகு விண் வெளியில் வேலினை ஊக்குவித்து உந்தித் தள்ளுகின்ற தன்மையில் உள்ள இயக்கும் பொருளோ எதுவும் அதனுள்ளே பொருத்தப்பட்டிருக்கக் கூடாது.

வேலெறியும் போட்டிக்கு சிறிது வளைந்த நீளமான கோடு ஒன்று தேவை. அந்தக் கோடும் 12 அடி நீளமுள்ளதாகவும், தெளிவாக சுண்ணாம்புக் கோட்டினால் போடப்பட்டிருக்க வேண்டும்.